இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை... ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவு!

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர்களின் முன்னிலை நிலரவம் குறித்து தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்தது.

இந்த வாக்குகளை எண்ணும் பணி சற்று முன்னர் தொடங்கியது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.

அதே போல அமேதி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் முன்னிலை வகிப்பதாகவும், அமேதியில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்