முன்னிலை வகிக்கும் திமுக... கருணாநிதியின் நினைவிடத்தில் எழுதப்பட்ட வாசகம் என்ன தெரியுமா?

Report Print Abisha in இந்தியா

இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் முக்கியதுவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் 7கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக பெருமளவில் முன்னிலை வகித்து வருகின்றது.

இதனை அடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என பூக்களால் வசனம் எழுதப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இது பெருமளவில் திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்