தேர்தலில் நான் தான் ஜெயிப்பேன்! எங்கள் கட்சியே ஆட்சி அமைக்கும்... முக்கிய வேட்பாளர்கள் நம்பிக்கை

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் நான் தான் வெற்றி பெறுவேன் என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் 54‌2 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து கடந்த 19ஆம் திகதி நிறைவடைந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன்னர் தொடங்கியது.

இதற்கு முன்னதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லியில் பாஜக எம்.பி மீனாட்சி லேக்ஹியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மேகான் கூறுகையில், கண்டிப்பாக தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்க்கு சாதகமாகத்தான் வரும். காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராவதை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம். டெல்லியில் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் தான் போட்டி எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கலாபுராகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லீகார்ஜூன் கார்கேவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ், மோடியே அடுத்த பிரதமர். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, நான் கண்டிப்பாக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வேன் என கூறினார்.

கேரளா திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன், மாநில மக்களின் நலனுக்காகவும், ஊழியர்களுக்காகவும் டில்லியில் பாஜக அரசாங்கத்துடன் சேர்ந்து கேரளத்தை நகர்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போது கேரளா முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்து வருகிறது. நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்