இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலை பொறுத்த வரையில் திமுக அபார வெற்றி பெற்றிருந்தாலும், இடைத்தேர்தல் முடிவுகளில் அதிமுக- திமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இன்னும் சில தொகுதிகளில் முடிவுகள் வெளியாகாமல் இருப்பதால் சதி வேலை நடக்கலாம் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

 • May 23, 2019
 • 02:23 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தொகுதி வெற்றி வேட்பாளர் கட்சி வாக்குகளின் எண்ணிக்கை
பெரம்பூர் ஆர்.டி.சேகர் திமுக 48066
திருப்போரூர் இயதவர்மன் திமுக 50128
சோளிங்கர் சம்பத் அதிமுக 78982
குடியாத்தம் காத்தவராயன் திமுக 106137
ஆம்பூர் வில்வநாதன் திமுக 95504
ஓசூர் சத்யா திமுக 113602
பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி அதிமுக 91518
அரூர் சம்பத் அதிமுக 84380
நிலக்கோட்டை தேன்மொழி அதிமுக 81712
திருவாரூர் பூண்டி கலைவாணன் திமுக 93176
தஞ்சாவூர் நீலமேகம் திமுக 73802
மானாமதுரை நாகராஜன் அதிமுக 81319
ஆண்டிபட்டி மகாராஜன் திமுக 51962
பெரியகுளம் சரவணக்குமார் திமுக 66984
சாத்தூர் ராஜவர்மன் அதிமுக 76820
பரமக்குடி சாதன பிரபாகர் அதிமுக 45262
விளாத்திகுளம் சின்னப்பன் அதிமுக 70139
பூந்தமல்லி கிருஷ்ணசாமி திமுக 92662
சூலூர் கந்தசுவாமி அதிமுக 100298
அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி திமுக 92823
திருப்பரங்குன்றம் சரவணன் திமுக 63118
ஓட்டப்பிடாரம் ஷண்முகய்யா திமுக 71299

 • May 23, 2019
 • 02:18 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளர் ஜெயக்குமாரை விட 28,554 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • May 23, 2019
 • 02:18 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் சார்பாக போட்டியிட்ட கணேசமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறுள்ளார்.

 • May 23, 2019
 • 01:31 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

”ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்” என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

 • May 23, 2019
 • 01:30 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

”ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்” என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

 • May 23, 2019
 • 12:58 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஆம்பூர் சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோதிலிங்க ராஜவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 12:56 PM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஆம்பூர் தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜவை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 10:23 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழக சட்டமன்ற தேர்தலின் தற்போதைய நிலவரம்

கூட்டணிகள் போட்டி முன்னிலை வெற்றி
திமுக+ 22 11 0
அதிமுக+ 22 09 0
மற்றவை 22 00 0

 • May 23, 2019
 • 10:20 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கந்தர்வராயன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • May 23, 2019
 • 09:05 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் விஷ்வநாதன் வெற்றி உறுதியாகியுள்ளது.

 • May 23, 2019
 • 09:03 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி

 • May 23, 2019
 • 06:34 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தற்போதைய நிலவரப்படி அதிமுக 10 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

 • May 23, 2019
 • 06:21 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களில் முன்னிலை பெற்று வருவதால், அக்கட்சியினர் சென்னையில் இருக்கும் திமுக தலைமை அலுவலகம் முன்பு வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 • May 23, 2019
 • 05:59 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

பெரம்பூர் தொகுதியில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியுள்ளார் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரியதர்ஷினி.

 • May 23, 2019
 • 05:51 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

முன்னிலை வேட்பாளர்கள் நிலவரம்

பெரம்பூர்- ஆர்.டி.சேகர் (திமுக)

திருப்போரூர்- செந்தில் (திமுக)

சோளிங்கர்- ஜி.சம்பத் (அதிமுக)

குடியாத்தம்(தனி)- காத்தவராயன் (திமுக)

ஆம்பூர்- வில்வநாதன் (திமுக)

ஓசூர்- ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி (அதிமுக)

பாப்பிரெட்டிபட்டி- எ.கோவிந்தசாமி (அதிமுக)

அரூர் (தனி)- வி.சம்பத் (அதிமுக)

நிலக்கோட்டை (தனி)- எஸ்.தேன்மொழி (அதிமுக)

திருவாரூர்- பூண்டி கலைவாணன் (திமுக)

தஞ்சாவூர்- நீலமேகம் (திமுக)

மானாமதுரை (தனி)- எஸ்.நாகராஜன் (அதிமுக)

ஆண்டிப்பட்டி- லோகி ராஜன் (அதிமுக)

பெரியகுளம்- சரவண குமார் (திமுக)

சாத்தூர்- ராஜ வர்மன் (அதிமுக)

பரமக்குடி(தனி)- சம்பத் குமார் (திமுக)

விளாத்திகுளம்- சின்னப்பன் (அதிமுக)

திருப்பரங்குன்றம்- சரவணன் (திமுக)

அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி(திமுக)

சூலுர்- வி.பி.கந்தசாமி (அதிமுக)

ஓட்டப்பிடாரம்- சண்முகய்யா (திமுக)

 • May 23, 2019
 • 05:23 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் திமுகதான் வெற்றி பெறும், அதற்கு தலைவர் மு.க. ஸ்டாலினின் வியூகம்தான் காரணம் - திருச்சி சிவா

 • May 23, 2019
 • 05:19 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

மக்களவைத் தேர்தலில் திமுக முன்னிலை வகித்தாலும். இடைத் தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க கடும் போட்டி அளித்து வருகிறது.

 • May 23, 2019
 • 05:18 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

 • May 23, 2019
 • 05:00 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

 • May 23, 2019
 • 04:58 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

சாத்தூர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம் : ராஜவர்மன் (அதிமுக)- 3385, சீனிவாசகன் (திமுக)- 3349, எஸ்.ஜி.சுப்பிரமணியன் (அமமுக)- 728

 • May 23, 2019
 • 04:55 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்ட மன்ற இடைத் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி அதிமுககூட்டணி 10 இடங்களிலும், திமுக 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 • May 23, 2019
 • 04:49 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் முதல் சுற்று நிலவரப்படி அதிமுக - 3970 வாக்குகளும் தி மு க - 3969 வாக்குகளும் அமமுக - 1185 வாக்குகளும் பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தன் சகோதரரான திமுக வேட்பாளர் மகாராஜனை விட ஒரு ஓட்டு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 • May 23, 2019
 • 04:18 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்

கூட்டணிகள் போட்டி முன்னிலைவெற்றி
அதிமுக+ 22 10 0
திமுக + 22 08 0
மற்றவை 22 00 0 • May 23, 2019
 • 03:46 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக - திமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் திமுக முன்னிலை வகிக்கிறது.

தமிழக சட்டமன்றத்துக்கான 22 தொகுதிக்கு இடை தேர்தல் நடந்து முடிந்து நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி அதிமுக 5 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

 • May 23, 2019
 • 03:30 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் 22 தொகுதிகளின் சட்டமன்ற தேர்தலுக்கான இடைத் தேர்தலில் அதிமுக 3 இடங்களிலும், திமுக 1 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

 • May 23, 2019
 • 03:22 AM
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்? இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 22 இடங்களில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

Load More
முதல் இணைப்பு: இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. 8:30 மணி முதல் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், மற்றும் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 306 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூர்மையாக உள்ள பேனா, கத்தி போன்றவை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

முகவர்களுக்குத் தேவையான அனைத்தும் மையத்திலிருந்து 100 மீற்றர் சுற்றளவில் தான் கிடைக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காததைத் தடுத்த தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக 3 இடங்களிலும், திமுக 1 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்