உள்ளூரில் வசித்த கணவன்.. குடும்ப பாரத்தை சுமக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற இளம் மனைவி.. அங்கு நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சவுதி அரேபியாவுக்கு வேலை தேடி சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா (26). திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு வேலை தேடி சென்றார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாத்திமா குடும்பத்தாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு போன் வந்த நிலையில் பாத்திமா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கண்ணீருடன் பேசிய பாத்திமா மாமியார் கவுசியா பேகம், என் மகன் விபத்தில் சிக்கினான்.

இதையடுத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாத்திமா சவுதிக்கு வேலை தேடி சென்றார்.

அவள் இறந்துவிட்டார் என எங்களுக்கு தகவல் வந்ததே தவிர எப்படி இறந்தார் என தெரியவில்லை.

பாத்திமாவின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது, அவர் உடலை அங்கேயே புதைக்கும்படியும் எங்களை வற்புறுத்துகிறார்கள்.

இந்த பிரச்சனையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு உதவ வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்