கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீச்சு: பொலிஸார் குவிப்பு!

Report Print Vijay Amburore in இந்தியா

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிய போது கல் மற்றும் முட்டை வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 11ம் திகதி அன்று அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று தொிவித்திருந்தாா்.

இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்த நிலையில் மீண்டு அரவக்குறிச்சி தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு முடித்தார்.

பின்னர் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய போது, மர்ம நபர்கள் சிலர் கல் மற்றும் முட்டையை வீசி எறிந்தனர். உடனே அங்கிருந்த தொண்டர்கள் அந்த நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.பி.விக்ரமன், தொண்டர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers