உணவு திருடியதாக அடித்து கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மதுவை நினைவிருக்கிறதா? அவர் சகோதரி செய்துள்ள சாதனை

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் உணவு திருடியதாக கூறி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி தற்போது காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.

கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 16 பேர் கொண்ட கும்பலால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி அடித்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் இதில் தொடர்புடையவர்களை கைது செய்தனர்.

மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை. சில பழங்கள் மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.

அப்போது மது பிணவறையில் சடலமாக இருந்த போது அவரின் சகோதரி சந்திரகா கனத்த இதயத்தோடு காவலர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்றார்.

இந்நிலையில் சந்திரிகா தற்போது காவலராகி உள்ளார்.

தன் சகோதரனுக்கு இந்தப் பணியை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார், அண்ணனின் இழப்பை ஏற்க முடியாத சந்திரிக்கா நேர்காணலை எதிர்கொள்ள முடியாது என சோர்ந்துப் போனார்.

இருப்பினும் தனது குடும்பம் கட்டாயப்படுத்தியதால் நேர்காணலில் சந்திரிக்கா அப்போது கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்