12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகன்.. விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

Report Print Kabilan in இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்ததால், வேதனையில் தாய் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம், டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. இவரது மகன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால், அந்த தேர்வில் தோல்வியடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனையடைந்தார்.

இந்நிலையில், நீலம் தேவி தனது வீட்டில் நேற்றைய தினம் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக நீலம் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீலம் தேவி குடித்த விஷத்தின் வீரியத்தால் பாதி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டாலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers