தடுப்பு வேலியில் ஏறி குதித்த பிரியங்கா காந்தி- வீடியோ

Report Print Abisha in இந்தியா

பிரியங்கா காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீசார் பாதுகாப்புக்கு அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார் தற்போது அந்த காட்சி வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் Ratlam என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, மக்கள் கூட்டத்தினரிடம் இருந்து பிரித்து தடுப்புகளை அமைத்து பாதுகாப்பாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் திடீரென தடுப்பு வழியாக ஏறிக் குதித்து அவர் மக்களை சந்தித்தார்.

பிரியங்கா காந்தி தடுப்பின் மீது ஏறிக் குதித்ததால் பாதுகாவலர்களும் வேறு வழியின்றி தடுப்பின் மீது ஏறிக் குதித்து பாதுகாப்பு அளித்தனர் அந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers