அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற இந்திய பெண் உயிரிழப்பு!

Report Print Vijay Amburore in இந்தியா

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாய் சென்ற இந்திய பெண் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரீட்டா பெர்னாண்டஸ் (42) மும்பையை சேர்ந்தவர்.

இவர் கடந்த மே 9ம் திகதியன்று இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக துபாயில் உள்ள அல் சகாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சை நடந்த விதம் மற்றும் அனைத்தையும் வெளிப்படையாகவே ரீட்டா பெர்னாண்டஸ் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தோம் என மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமீம் அப்தல்ஹானி கூறியுள்ளார்.

ரீட்டா பெர்னாண்டஸ் பிறந்த பொழுதே அவருடைய இடுப்பு எலும்பு இடம் மாறி இருந்ததால், குடும்பத்தாரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் தற்போது துபாய் சுகாதார ஆணையம் மற்றும் இண்டர்நேஷன்ல் கூட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, பல தரப்பட்ட மதிப்பாய்வு விசாரணைகளை செய்ய தூண்டியுள்ளது.

ரீட்டா பெர்னாண்டஸின் கணவர் தொடுத்த வழக்கின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்