சர்ச்சைப் பேச்சு.. கமலின் நாக்கை அறுக்க வேண்டும்! கொந்தளித்த அமைச்சர்

Report Print Kabilan in இந்தியா

சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற, விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் பரப்புரை செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் கோட்சே என்றும் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவரின் இந்தப் பேச்சுக்கு அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

‘கமல்ஹாசனுக்கு நாக்கில் சனி உள்ளது. இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியில் சென்று இந்து தான் முதல் பயங்கரவாதி என்று பேசியிருக்கிறார். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. தீவிரவாதியை தீவிரவாதி என்றே கூற வேண்டும். கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்.

யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை கூற கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers