இந்தியாவின் முதல் தீவிரவாதி: கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா

தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சையாக பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார்.

கமலில் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரச்சாரத்தின் மீது சர்ச்சையாக பேசிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு அளித்துள்ளார்.

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறிய கமல்ஹாசன் 5 நாட்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers