மகளின் இறுதிச்சடங்கில் சபதம் எடுத்த தந்தை... இன்று அந்த பகையை கொடூரமாக தீர்த்துக் கொண்ட பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்து நடத்துனராக இருக்கும் இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்தார், அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் இவருக்கும், எழுமலை என்பவரின் மகளான ஆனந்த வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஆனந்த வள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் தன் தற்கொலைக்கு காரணமான குமரவேலை நிச்சயமாக கொலை செய்வேன் என்று ஆனந்த வள்ளியின் இறுதிச் சடங்கின் போது தந்தை எழுமலை சபதம் போட்டுள்ளார்.

அதன் படி அவருடன் தொடர்ந்து பழகி வந்த அவர், நேற்று விருத்தாசலத்தில் குமரவேலுவுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த எழுமலையை, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று, வீட்டில் இருந்த மருமகன் சண்முகம், மனைவி வசந்தி ஆகியோரின் உதவியால் குமரவேலின் கழுத்தைக் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்..

அதன் பின் அவரின் உடலை அருகிலிருக்கும் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுரங்கத்தில் போட்டுவிட்டால் யாருக்கும் தெரியாது என எண்ணிய குமரவேல், ஒரு ஆட்டோவில் உடலை ஏற்றிச்சென்றுள்ளார்.

நள்ளிரவு நேரம் என்பதால், தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், ஆட்டோவில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வாகனச்சோதனயில் ஈடுபட்டிருந்த பொலிசார் ஆட்டோவில் இருக்கும் இரத்தக்கறையை கண்டு விசாரித்த போது, உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே முழு தகவல்களை கூறுகிறோம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers