இலங்கை காத்தான்குடியில் 5 பேர் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கை காத்தான்குடியில் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாத 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலிசார் இணைந்து காத்தான்குடியிலுள்ள வீடுகளிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லை என தெரிவித்த பொலிசார் மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்