இலங்கையை உலுக்கிய தாக்குதலின் சூத்திரதாரியின் பேஸ்புக் பதிவை லைக் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை வெடிகுண்டு தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் ஜகரன் ஹாசிம் பேஸ்புக் பதிவை லைக் செய்த இளைஞருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜகரன் ஹாசிம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்தது.

ஜகரன் முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ மற்றும் பதிவுகளை பதிவிட்டு வந்தார்.

இதில் ஜகரன் பேசிய ஒரு வீடியோவை கேரளாவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (28) என்பவர் ஓராண்டுக்கு முன்னர் பேஸ்புக்கில் லைக் செய்த நிலையில் அதன் காரணமாக தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

சித்திக்கிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் அவர் வீட்டிலும் சோதனை செய்துள்ளனர்.

சித்திக்குடன் சேர்ந்து அவர் நண்பர் அகமது அரபட் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

இது குறித்து சித்திக்கின் சகோதரர் பாரூக் கூறுகையில், சித்திக் மற்றும் அவர் நண்பர் அகமது ஆகிய இருவரும் இஸ்லாமிய சொற்பொழிவுகளை ஓன்லைனில் பார்ப்பார்கள்.

அப்படி தான் ஜகரன் பேசிய வீடியோவை சித்திக் லைக் செய்திருக்கிறார்.

பின்னர் பேஸ்புக்கில் ஜகரனை சித்திக் follow செய்தார், ஆனால் ஜகரன் வீடியோவில் சில கொடியெல்லாம் காட்டப்பட்ட நிலையில் அவரை சித்திக் unfollow செய்துள்ளார்.

ஆனால் சித்திக் அப்போது லைக் செய்ததற்காக இப்போது விசாரிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

சித்திக் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கார் தொழில் செய்து வந்த நிலையில் பின்னர் துபாய்க்கு வேலைக்காக சென்றார்.

பின்னர் ஒரு வருடம் கழித்து துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து வாசனைத்திரவியம் வியாபாரம் செய்து வருகிறார் என பாரூக் கூறியுள்ளார்.

சித்திக் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதையும் பாரூக் மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்