ராகுல் காந்தி இந்திய குடிமகன் இல்லையா? கொந்தளித்த சகோதரி பிரியங்கா

Report Print Kabilan in இந்தியா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சகம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரித்தானியாவின் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, கடந்த 2015ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரித்தானிய குடிமகன் என்றும், பிரித்தானியாவில் உள்ள பேக் ஆப்ஸ் என்ற நிறுவனத்தில் அவர் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டு புகார் கூறினார்.

அந்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே இந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், இந்த புகாரை பொய் என்று உச்ச நீதிமன்றம் 2015ஆம் ஆண்டிலேயே தெரிவித்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தர பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நோட்டீஸ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘இவர்கள் கூறும் குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது. மொத்த இந்தியாவிற்கும் ராகுல் காந்தி ஒரு இந்தியர்தான் என்று தெரியும். அவர் இங்கே தான் பிறந்தார் என்பது தெரியும்.

அவர் வளர்ந்ததைக் கூட எல்லோரும் கண்கூடாக பார்த்தார்கள். அது ஏன் சிலருக்கு மட்டும் தெரியாமல் இருந்துள்ளது. அதை ஏன் இப்போது இவர்கள் கேள்வி எழுப்பி, இங்கே வந்து இருக்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்