சென்னையில் வந்து தங்கிய இலங்கை தாக்குதல்தாரியின் நெருங்கிய நண்பன்: பலருடன் சந்திப்பு...!

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய நண்பர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்து சென்றார் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜரான் ஹாசீம் என்ற தீவிரவாதியின் நெருங்கிய நண்பரான ஹசன் என்பவர் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடந்த 14ஆம் திகதி வந்து சென்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஹசன் விமானம் மூலம் வந்ததாகவும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹசன் சென்னையில் இரு நாட்கள் தங்கி பல்வேறு நபர்களை சந்தித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் யாரையெல்லாம் சந்தித்தார் என விசாரணை நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்