அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்... பின்னர் நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியை இரண்டாம் மாடியிலிருந்து தனது தாயுடன் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரை சேர்ந்தவர் சீமா (39). இவருக்கும் நபர் ஒருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் சீமாவின் கணவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆண் குழந்தையுடன் தவித்த சீமாவை அவர் கணவரின் தம்பியான பிரேம் காந்தி என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே சீமாவுக்கும், பிரேமுக்கும் சண்டை ஏற்பட்டது.

மனைவியின் நடத்தையில் பிரேம் சந்தேகப்பட்டதாலேயே தகராறு ஏற்பட்டது. இதில் பிரேமுக்கு ஆதரவாக அவரின் தாய் ஷகுந்தலா (65) இருந்து வந்தார்.

இதனால் சீமா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்னர் கணவர் வீட்டுக்கு சீமா வந்தார்.

பின்னர் மீண்டும் சீமா - பிரேம் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்றனர், அவர்களுடன் சகுந்தலாவும் சென்றார்.

பின்னர் சீமா இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கீழே இருந்த சீமாவின் 17 வயது மகன் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சீமா உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேம் மற்றும் சகுந்தலா மீது சீமாவின் மகன் பொலிசில் புகார் அளித்தார்.

மேலும் சீமாவும், பிரேமும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை வீடியோ எடுத்ததாக கூறிய சிறுவன் அதையும் பொலிசில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து பிரேமை பொலிசார் கொலை வழக்கில் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers