திருமணமாகாமல் பிறந்த குழந்தை.... தந்தை யார் என்பதில் குழப்பம்: இறுதியில் தெரியவந்த உண்மை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தஞ்சை மாவட்டத்தில் திருமணமாகாத 17 வயது பெண் குழந்தை பெற்றெடுத்த விவகாரத்தில் தவறு செய்யாத இளைஞர் ஒருவர் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

மஞ்சுளா என்ற 17 வயது இளம்பெண் கர்ப்பமானதையடுத்து, திருமணமாகாமல் தங்களது மகள் கர்ப்பமாகியதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதற்கு யார் காரணம் என விசாரித்ததில், அந்த பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்ற இளைஞரை அப்பெண் கைகாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தநிலையில், ஆனந்தராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்தது.

சிறையில் இருக்கும் ஆனந்தராஜ் அந்த குழந்தைக்கு நான் அப்பா கிடையாது என தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தைக்கு தந்தை ஆனந்தராஜ் இல்லை என்பது உறுதியானது. இதற்கிடையே 90 நாள் சிறையில் இருந்த ஆனந்தராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனந்தராஜ் அக்குழந்தைக்கு தந்தை இல்லை என்பது உறுதியான காரணத்தால், மஞ்சுளாவிடம் மீண்டும் பொலிசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பால்ராஜ் என்பவர் மஞ்சுளாவை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் தவறாக ஆனந்தராஜை மஞ்சுளா தெரிவித்ததும் தெரியவந்தது.

அதன்பேரில் பால்ராஜை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers