இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவரின் பேச்சுகளை தொடர்ந்து கேட்டேன்.. ஐஎஸ் ஆதரவாளரின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் வேதனை மக்கள் மனதில் இருந்து இன்னும் மறையவில்லை.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்ததாகவும் ரியாஸ் அபூபக்கர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்