நிறைமாத கர்ப்பிணியை ஒதுக்கிய குடும்பத்தார்: மன கஷ்டத்தில் இருந்தவருக்கு திடீரென கிடைத்த மகிழ்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் கர்ப்பிணி பெண்ணை குடும்பத்தார் ஒதுக்கிய நிலையில் காவல் நிலையத்தில் அவருக்கு தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இலக்கியா (25). இவர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் ராசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் இரு வீட்டாருக்கும் பிடிக்காமல் நடந்தது.

இதன் காரணமாக இரு வீட்டாரும் இலக்கியா மற்றும் ராசுவிடம் பேசாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இலக்கிய குடும்பத்தார் தங்களை ஒதுக்கி வைத்தது குறித்து சக பொலிசாரிடம் கவலை தெரிவித்தார்.

இதையடுத்து பெண் பொலிசார் மற்றும் காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும் இணைந்து சிறுத்தொகையை போட்டு இலக்கியாவுக்கு பட்டுப்புடவை எடுத்து 9 வகையான சாப்பாடு போட்டு ஆரத்தி எடுத்து வளைகாப்பு கொண்டாடினர்.

வளைகாப்புக்கு வந்த அனைவருக்கும் காவல் நிலையம் அருகே சாப்பாடு போட்டனர். இந்த வளைகாப்பை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து நெகிழ்ந்தனர்.

இதுகுறித்து இலக்கியா கூறுகையில், கருத்துமோதல் காரணமாக வீட்டிலிருந்து ஒதுங்கி ஒரு மாதமாக இருந்து வருகிறேன். எனது தாய் வீடும், மாமியார் வீடும் நான் பணிபுரியும் காவல் நிலையம் தான். என்னுடன் பணிபுரியும் பொலிசார் தான் எனது உறவினர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்