இலங்கை குண்டுவெடிப்பு: கேரளாவை சேர்ந்த இருவரிடம் தீவிர விசாரணை... கைதாவார்களா?

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவை சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஞாயிறு அன்று இலங்கையின் எட்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு அந்நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டது.

சம்பவம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இரண்டு பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சந்தேகம் உறுதியானால் 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...