இலங்கை மக்களுக்காக சென்னையில் ஒன்றுதிரண்ட மக்கள்: மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு சென்னையில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கடந்த வாரம் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் 500க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆசிர்வாத ஆராதனை மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...