இலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

இந்தியர்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய 8 இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253-பேர் பலியாகினார். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன் காரணமாக நாடு முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த 21-ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது.

எனவே தற்போது அங்கு நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும் அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன்தோட்டா, யாழ்ப்பாணம் ஆகிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...