நான் கூறிய கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கொல்கத்தா நகரில் தான் கூறிய கட்சிக்கு வாக்களிக்க மறுத்த மனைவியின் வாயில் கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் திகதி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்சூரா பீபி என்ற பெண்ணின் கணவர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர் ஆவார். தன் மனைவியை திரிணாமுல் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார். ஆனால், அன்சூரா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், தனது மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கடும் பாதிப்புக்குள்ளான அன்சூரா பீபி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் 48 மணிநேரத்திற்கு பின் எதுவாக இருந்தாலும் கூற முடியும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அன்சூரா பீபியின் மகன் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது தாயின் தலைமுடியை இழுத்துச்சென்று அடித்து பின், வாயில் ஆசிட் ஊற்றி தன் தந்தை துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...