நான் ஒரு உல்பா தீவிரவாதி.. இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் வெளியானது

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் காவலாளியாக இருந்து வந்தவந்தவர் கந்தர்ப்பதாஸ்.

கடந்த ஆறு மாதமாக இந்த வேலையை பார்த்து வந்த நிலையில், இவர் தங்கியிருந்த அறையில், உடன் இருப்பவருடன் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இது கைகலப்பாக மாறியதால், அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற கந்தர்ப்பதாஸ் தான் ஒரு உல்பா தீவிரவாதி என்று கூறி எச்சரித்துள்ளான்.

இதையடுத்து வட மாநில பொலிசார் கொடுத்த தகவல் பேரிலும், அங்கிருந்தவர்களுடன் வாக்குவாத்தி ஈடுபட்டதன் அடிப்படையிலும் பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ், சென்னையில் பதுங்கி இருந்தது ஏன்? என்று கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தீவிரவாதி கந்தர்ப்பதாசுடன் தங்கியிருந்து, தனியார் மருத்துவமனையில் கட்டிட வேலை செய்து வந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும், பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த மர்மநபர், கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்ததார்.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவர் என தெரியவந்ததால், அவருக்கு பொலிசார் வலைவீசி உள்ளனர். மைக்கேல் பிரீடியை, கைது செய்த பிறகு தான் உண்மை நிலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்