இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்... சென்னையிலும் குண்டு வைத்துள்ளேன்... பொலிசாரை அதிரவைத்த நபர்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த மர்மநபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்தார்.

பின்னர் அவர் பொலிசாரிடம் கூறுகையில், இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்.

அதே போல சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவரை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers