இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக சென்னையில் தமிழர்கள் மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் அதில் கலந்து கொண்டனர்.

சென்னை அடையாறில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், தொழில் அதிபர் வி.ஜி.பி. சந்தோஷம், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதோடு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கம்யூனிஸ்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்