கண்முன்னே கணவனை கவ்விய முதலை... பதறியடித்து ஓடி வந்த மனைவி!

Report Print Vijay Amburore in இந்தியா

கடலூர் அருகே ஆற்றில் குளித்து கொண்டிருந்த நபரை மனைவியின் கண்முன்னே முதலை கடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி (46) என்பவர் புதன்கிழமை காலை 6 மணிக்கு வயலில் வேலையை முடித்துவிட்டு ஆற்றில் குளிக்க சென்றிருக்கிறார்.

அவருடன் அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் (60), குணசேகரன் (18) ஆகியோரும் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

எதிர்பாராத நேரத்தில் திடீரென ஆற்றில் இருந்த முதலை, ஜெயமணியை கடித்து உள்ளே இழுத்துள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் ஜெயமணி கதற ஆரம்பித்துள்ளார். அவரை கையை பிடித்து காப்பாற்றும் முயற்சியில் ராமலிங்கம் ஈடுபட்டும், அது தோல்வியில் முடிந்தது.

கணவரின் சத்தம் கேட்டு அவருடைய மனைவி பதறியடித்தபடியே ஓடிவந்து பார்த்துள்ளார். கணவரை முதலை இழுத்து செல்வதை பார்த்ததும் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து தரையில் சரிந்துள்ளார்.

இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி மறுநாள் காலையில், ஒரு புதரில் இருந்து ஜெயமணியின் உடலை பொலிஸார் மீட்டனர்.

பின்னர் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்