வெளியூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமி... 100-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்... பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி என்ற பெண் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்த சிறுமியை ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் வேளாங்கன்னி.

மீண்டும் வேலைக்கு அழைத்த போது அந்த சிறுமி வேலைக்கு செல்ல மறுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, தன்னை ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும், ஆபாசப் படம் எடுத்து மிரட்டியும் பாலியல் தொழிலில் தள்ளி கொடுமைப் படுத்தியதாக சிறுமி வேதனை தெரிவித்ததால் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ந்தனர்.

பின்னர் இது குறித்து சிறுமி மற்றும் அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலை தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்ற வேளாங்கன்னி ஒரு வீட்டில் சிறுமியை வேலைக்கு சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.

பின்னர் இரு மாதங்கள் கழித்து அவரது ஆண் நண்பர்கள் சிலர் சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டதாகவும், தாங்கள் சொல்கிறபடி கேட்கவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் ஊரில் தனியாக இருக்கும் தாய் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியதாக சுட்டிக்காட்டிஉள்ளார்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் சென்னை வடபழனியை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் உள்பட 100 க்கும் மேற்பட்ட நபர்கள் தன்னிடம் அத்துமீறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிறுமி.

அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வேளாங்கன்னி, குறுகிய காலத்தில் சொகுசுகார் ஒன்றையும், அவளது தம்பி அற்புதராஜ் பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாங்கி தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டதாகவும் அந்த சிறுமிக்கு சாப்பாடு மட்டும் போட்டு இந்த அட்டூழியத்தை தொடர்ச்சியாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பெண் புரோக்கர் வேளாங்கன்னி தலைமையிலான பிளாக் மெயில் கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...