வீட்டிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல் சத்தம்: சடலமாக கிடந்த பெற்றோர்!

Report Print Vijay Amburore in இந்தியா

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வயது மகனை அனாதையாக விட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன் (36).

இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அருணா(27) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் நரேஷ்மதன் என்கிற மகன் இருக்கிறான்.

நேற்று இவர்களுடைய வீட்டிலிருந்து நரேஷ்மதன் அழும் சத்தம் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. உடனே பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஜனனல் வழியாக பார்த்தபோது, பாலமுருகன் தூக்கில் தொங்கியவாறும், அவருடைய மனைவி அருணா தரையில் சரிந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என்கிற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையில் பெற்றோரை இழந்த குழந்தை அனாதையாக அழுதுகொண்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers