சீமானின் நாம் தமிழர் கட்சியின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது... யார் யாருக்கு வாய்ப்பு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பா.க.செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதியில் இரா.ரேவதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யாவும், சூலூர் தொகுதியில் வெ.விஜயராகவனும் போட்டியிடுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers