இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே இந்தியா எச்சரித்தது எனக்கு தெரியாது: மைத்திரி அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவிருப்பது குறித்து முன்கூட்டியே இந்திய உளவுத்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு தகவல் எனக்கு தெரியாது என இலங்கை ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை குண்டுவெடிப்பில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது, 500 பேர் காயமடைந்துள்ளனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் பரிமாறியதாகவும் ஆனால், அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்ததே இந்த பெருந்துயருக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் தகவல்களை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers