இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 26 தேதி பிற்பகல் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இதில் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும் கோஷம் எழுப்ப இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் சீமான் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதில், இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்றும் 2 லட்சம் தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி, நீதிகேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தாக்குதலானது பெரும் ஐயத்தை தோற்றுவிக்கிறது என தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்