தமிழகத்திற்கு உலக அரங்கில் பெருமை தேடித் தந்த வீராங்கனை! ஸ்டாலினின் வாழ்த்து ட்வீட்

Report Print Kabilan in இந்தியா

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற வீராங்கனை இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றுள்ளார். 800 மீற்றர் ஓட்டப் பந்தய தூரத்தை அவர் 2.02 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார்.

தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘800 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு GomathiMarimuthu முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர், மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers