தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ஸ்ரீகாந்த்... ஆனால் விரலில் வைத்துகொண்ட மை... எழுந்த சர்ச்சை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நடிகர் ஸ்ரீகாந்த் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டதாகவும், அவர் வாக்களிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மக்களை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் 71.87 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் ரோஜாக்கூட்டம், நண்பன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அளித்துள்ள பேட்டியில், நடிகர் ஸ்ரீகாந்த் தேர்தலில் வாக்களிக்கவில்லை, அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் வாக்களிக்காத ஒருவரின் விரலில் எதற்காக மை வைத்தார்கள் என சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்