கொழும்பு குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய புதுமணத்தம்பதியினர்: தேனிலவு சென்ற இடத்தில் நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

சென்னை எழும்பூரை சேர்ந்த இனியன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

புதுமணதம்பதியினர் தேனிலவுக்காக கடந்த 19 ஆம் திகதி இலங்கை சென்றுள்ளனர்.

இருவரும் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஹொட்டலில் ஒன்றான கிங்ஸ்பரி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு ஹொட்டலில் தங்கியிருந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இவர்கள், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக கூறியுள்ளார்கள்.

இலங்கை குண்டுவெடிப்பில் தற்போது வரை 310 பேர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்