மதுபோதையில் தூக்குப்போட்டுக் கொள்வதாக நடித்த இளைஞர்.. பின்னர் நடந்த விபரீதம்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில், இளைஞர் ஒருவர் மது போதையில் தூக்கில் தொங்குவது போல் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே திருச்சானுரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த இளைஞர் சிவகுமார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பணியை முடித்து வீட்டிற்கு வந்த சிவகுமார், அதிகளவில் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் செய்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக நடித்துள்ளார். மின்விசிறியில் துணியை கட்டி கழுத்தில் அவர் மாட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் துணி இறுக்கியது. இதனால் சிவகுமாரால் மூச்சு விட முடியவில்லை. அவரது எவ்வளவோ போராடியும் விடுபட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிவகுமாரின் நண்பர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்