வெளிநாட்டில் வேலை முடிந்து ஊருக்கு வந்த இளைஞர்: மொத்த குடும்பத்தினரால் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஒரு குடும்பமே சேர்ந்து வாலிபரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி (62). இவரது மனைவி தமிழ்செல்வி (50). தம்பதிக்கு மோகனவேல் (33), மகேஷ் (29), ரமேஷ் (25) என 3 மகன்கள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணம் ஆகவில்லை.

இதில், மோகனவேல் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் உள்ளூரில் வேலை செய்கின்றனர். இரண்டாவது மகன் மகேஷ் சிங்கப்பூரில் பணி செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு சில தினங்களுக்கு முன்னர் மகேஷ் வந்தார்.

இதையடுத்து மகேஷ் மது குடித்து விட்டு குடிபோதையில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்தபோது தகராறு முற்றியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை மணி தனது மகன்கள் மோகனவேல், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மகேஷை பலமாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து மகேஷ் குடும்பத்தார் அவரது உடலை தூக்கி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செய்து விட்டு, மகேஷ் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மகேஷின் உடலை பரிசோதித்த போது அவரது தலையில் ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொத்த குடும்பமும் சேர்ந்து மகேஷை கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து தந்தை மணி, சகோதரர்கள் மோகனவேல், ரமேஷ் மற்றும் கொலையை மறைக்க உதவிய தாய் தமிழ்செல்வி ஆகிய 4 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்