வாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர், பொலிசாருடன் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்றதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேராளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளைய தினம் 3ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று திரிச்சூர் மாவட்டத்தில் அதிகாரிகளும், பொலிசாரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை லொறியில் இருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அனுபமா, இந்த பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அதிகாரி ஒருவர், வாக்குப்பெட்டியை இறக்குவதற்கு மற்றொரு காவலருக்காக காத்திருந்தார்.

இதனை கவனித்த அனுபமா சற்றும் சிந்திக்காமல் அவருக்கு உதவினார். ஒரு கை பிடித்து பெட்டியை உள்ளே கொண்டு செல்ல, காவலருக்கு அவர் உதவி செய்ததைப் பார்த்த மற்ற அதிகாரிகள் பதறிப்போய் உதவுவதற்காக ஓடி வந்தனர்.

ஆனால், அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை காட்டி அனுபமா தடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ‘இந்த இளம் அதிகாரிக்கு எங்களின் வாழ்த்துக்கள்’, ‘இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கிறார்கள்’ என பலர் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அனுபமாவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்