கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் இதயத்தை நொறுக்குகிறது! சவாலை முறியடிக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

Report Print Raju Raju in இந்தியா

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடந்துள்ள குண்டுவெடிப்பில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், #Colombo குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது.

இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்