அப்பாவி மக்களின் உயிர்க்கொலையால் என்ன சாதிக்க முடியும்? இலங்கை குண்டுவெடிப்பு குறித்து நடிகர் விவேக்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து நடிகர் விவேக் உருக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் 7 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் பலர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரபல நடிகர் விவேக் டுவிட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கை குண்டு வெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி மக்களின் உயிர்க்கொலையால் என்ன சாதிக்க முடியும். கருணையே உருவான ஏசு பிரான் உயிர்தெழுந்த நாள் அன்று இத்தனை உயிர் பலியா? என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்