இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்! நரேந்திர மோடியின் ட்வீட்

Report Print Kabilan in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டு மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

கொழும்பில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பலரும் இந்த கோர சம்பவத்திற்கு கண்டனமும், பலியானவர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘இலங்கையில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பிராந்தியத்தில் காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை. இந்தியா ஒற்றுமையுடன் இலங்கை மக்களுக்காக துணை நிற்கும்.

என்னுடைய எண்ணங்கள் எல்லாம் பலியான குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான பிரார்த்தனையே ஆகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்