கொடூரமாக வெட்டி சிதைக்கப்பட்டிருந்த விவசாயி: விடிந்ததும் மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் விவசாயி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.

தோட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என கூறிவிட்டு நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

விடிந்ததும் அவருடைய மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது வெள்ளைச்சாமி, கொடூரமாக வெட்டி சிதைக்கப்பட்டு கிடந்துள்ளார். இதனை பார்த்த்து அதிர்ச்சியடைந்த மகன்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்