மண்ணுக்குள் தோண்ட தோண்ட லட்சக்கணக்கில் பணம்... அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 75 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் அங்குள்ள ஒரு தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 68 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது பறக்கும் படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதேபோன்று, உருளைக்குடி அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 75 லட்சம் ரூபாய் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers