விதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கேரளாவிற்கு கடத்திய இளைஞர்!

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.

ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது, ஜோஸ்பிளின் ராஜகுமார் (22) என்பவரிடம் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.

அவருடைய செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கேரளா மாநிலத்தில் இருப்பதாக காட்டியது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் ஜோஸ்பிளின் ராஜகுமார் மற்றும் மாணவியை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜோஸ்பிளின் ராஜகுமார் கடந்த ஓராண்டாவாகவே விதவிதமான ஆடைகளில் பள்ளி முன்பாக சென்று மாணவியை மயக்கி காதல் வலையில் விழ வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவரும் தனியாக சென்று சந்தோசமாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறி, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து வருமாறு ராஜகுமார் கூறியுள்ளார்.

அதனை நம்பிய அந்த மாணவியும், நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்துள்ளார். அங்கு தனியாக ஒரு வாடகை வீட்டில் வைத்து மாணவியை நாசம் செய்துள்ளார். அப்போது தான் அவர் ஒரு கட்டிடத்தொழிலாளி என்பது மாணவிக்கு தெரியவந்துள்ளது.

மேலும் மாணவியிடம் இருந்தக நகைகளை பிடுங்கி, கடையில் விற்று ராஜகுமார் செலவு செய்துவந்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிக்கு வேறு ஏதேனும் மாணவிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்