தினகரன் கட்சி வேட்பாளர் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்று வைரலான வீடியோ... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

இளம்பெண்ணுடன் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர் கதிர்காமு உல்லாசமாக இருந்ததாக ஒரு வீடியோ வெளியான நிலையில், அவரை தேர்தல் முடிவும் வரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியகுளம் தொகுதியில் கடந்த 2016ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் டாக்டர் கதிர்காமு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரனுடன் இவர் இணைந்ததால், எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் தற்போது பெரியகுளம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரியகுளம் அருகே சருத்திபட்டியை சேர்ந்த இளம்பெண், ஏப்ரல் 8-ம் திகதி கதிர்காமு மீது பொலிசில் பாலியல் புகார் அளித்தார்.

அதில், கடந்த 2015-ம் ஆண்டு எனது தந்தைக்கு உடல்நலம் பாதித்ததால் மருத்துவர் கதிர்காமு மருத்துவமனைக்கு சென்றோம். எனக்கும் முழங்கால் வலி இருந்ததால் அவரிடம் சிகிச்சை பெற்றேன். அப்போது மயக்க ஊசி போட்டு என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கு அவரிடம் நியாயம் கேட்ட போது, மயக்கத்தில் இருந்த என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி, பலமுறை என்னை பலாத்காரம் செய்தார் என தெரிவித்திருந்தார்.

இதற்கேற்றார் போல இளம் பெண்ணுடன் கதிர்காமு உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூகவலைதளங்களில் தீயாக பரவியது.

இதையடுத்து அவர் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.

இதனையடுத்து அரசியல் காரணங்களுக்காக தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக முன்ஜாமீன் கோரி கதிர்காமு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் கதிர்காமுவிற்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளதோடு, தேர்தல் வரை அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்