நாடாளுமன்ற தேர்தலும் கட்சி தாவலும்

Report Print Abisha in இந்தியா

மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இரானியின் உதவியாளர் காங்கிரசில் இணைந்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகள் சார்பாகவும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பல கட்சிகளிலும் தங்களது கட்சியின் சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்காக கட்சி தாவலும் நடைபெற்று வருகின்றது.

மத்திய அமைச்சரும், அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அமேதியை சேர்ந்த ரவிதத் மிஸ்ரா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர் ஆவர்.

ஸ்மிருதி இரானி எப்போது அமேதிக்கு வந்தாலும் ரவிதத் மிஸ்ராவின் வீட்டில் தங்குவதுதான் வழக்கம்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் அமேதி சுற்றுப்பயணத்தின் போது ரவிதத் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மாநில அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்