தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் - 15 வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை

Report Print Abisha in இந்தியா

ஒடிசா மாநிலத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 15 வாக்குசாவடிகளில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. காலை முதல் நபரங்பூர், கோரபுத், கலஹந்தி, பெர்ஹாம்பூர் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றது.

மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மால்கன்கிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்