நாட்டுக்காக தனது உயிரையும் அர்ப்பணிக்க தயாரானவர் மோடி- ராகுல்காந்தியின் சகோதரர்

Report Print Abisha in இந்தியா
80Shares

பிரதமர்களாக பதவி வகித்த தனது குடும்ப உறுப்பினர்களைவிட, பிரதமர் மோடிதான் இந்தியாவுக்காக அதிக பெருமையை தேடித்தந்துள்ளதாக, பாஜகவைச் சேர்ந்தவரும் ராகுல் காந்தியின் சகோதரருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில், போட்டியிடும் வருண் காந்தி, அங்கு நடந்த தேர்தல் பரப்புரையின்போது

நாட்டுக்காக தனது உயிரையும் அர்ப்பணிக்க தயாரானவர் மோடி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து பிரதமர் பதவிக்கு வந்தபோதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளிலும் மோடி சிக்கியது இல்லை எனவும்அவர் கூறி உள்ளார். மேலும், இந்திய நாட்டுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயாராகவுள்ளவர்தான் பிரதமர் மோடி எனவும் புகழாரம் சூட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்